தஞ்சாவூர் அருகே மேலகளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். அவரது மகள் காவியா (26), ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த பெயின்டர் அஜித்குமார் (29) உடன் காவியா 13 ஆண்டுகளாக காதலில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இருவரும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காவியாவுக்கு அஜித்குமாரை திருமணம் செய்து வைக்க காவியாவின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இதனால், கடந்த நவம்பர் 23ஆம் தேதி உறவுக்கார இளைஞருடன் காவியாவின் நிச்சயதார்த்தத்தை அவர்கள் நடத்தினர்.
இந்த தகவலை காவியா அஜித்குமாரிடம் மறைத்து, வழக்கம்போலவே அவருடன் தொடர்பு வைத்திருந்தார். பின்னர், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தன்னை நிச்சயதார்த்தம் செய்த விவரத்தையும், அதற்கான புகைப்படங்களையும் அஜித்குமாருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அஜித்குமார், நேற்று காலை பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்ற காவியாவை கொத்தட்டை காலனி பகுதியில் வழிமறித்து, “நிச்சயதார்த்தம் செய்ததை ஏன் மறைத்தாய்?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் போது ஆவேசமடைந்த அவர், கைப்பிடியில் இருந்த அரிவாளால் காவியாவின் தலையில் தாக்கினார். பரிதாபமாக காவியா திடீரென உயிரிழந்தார்.
டனையிற்குப் பிறகு, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த அஜித்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் தான் டிமார்ட் சூப்பர்மார்க்கெட்டை நடத்தி வருகிறது. 2025 ஆகஸ்ட்…
We are currently looking for a Laravel Developer, SEO Analyst, Digital Marketing, Graphic Designer and…
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவிலில் வேங்கடாசலபதி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால்…
MEENAKSHI TRADERS PROPRIETOR M.CHANDRA SEKARAN,S/O.V.MEENAKSHISUNDARAM Thanjavur தனியார் Start date : 22-02-2025 End date : 10-03-2025 Looking…
SK Webventure is an independent company of multi-disciplinary experts with a vision to empower clients…