தனுஷ் சொன்ன மாதிரி ஜாலியா பார்க்கலாமா.? நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ட்விட்டர் விமர்சனம்
NEEK Movie Twitter Review: தனுஷ் இயக்கி தயாரித்துள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. முழுக்க முழுக்க இளம் பட்டாளங்களை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
அதுவும் ட்ரைலரில் படத்தை ஜாலியா வந்து ஜாலியா பாத்துட்டு போங்க என தனுஷ் சொல்லி இருந்தார். அதற்கு ஏற்றது போல் காட்சிகளும் இருந்தது.
மேலும் பிரமோஷனும் ஜோராக நடந்தது. அந்த வகையில் தற்போது படத்தை பார்த்த சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தனுஷ் சொன்ன மாதிரி ஜாலியா பார்க்கலாமா.?
அதில் படம் முழு எண்டர்டெயின்மென்ட் ஆக இருக்கிறது என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. ஜிவி பிரகாஷின் இசை தனுஷின் திரைக்கதை அனைத்துமே பலம் தான்.