தஞ்சாவூர் சாலைக்கு வந்த ராட்சசன்.. பதறியடித்து ஓடிய மக்கள்.. களமிறக்கப்பட்ட வனத்துறை.. ஒரே திக்திக்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் குடியிருப்புப் பகுதிகளில் இந்திய கௌர் (Indian Gaur) எனப்படும் காட்டு மாடு நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் மூலம் இந்திய கௌர் எருதை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
தஞ்சாவூரில் உள்ள சுங்கந்திடல், கோடியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதிகளில் சுற்றித் திரிந்த காட்டெருமை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாட்டை இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார், விலங்கை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் ரஞ்சித், இளையராஜா, ரவி, மணிமாறன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆளில்லா விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.